அரும்புகள் மலரட்டும்: அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

Sunday 18 January 2015

அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..
சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.

63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.

18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.

226,80,00,000×10 = 2,268,00,00,000.

வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?
இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?
இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..? அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.
அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?
பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?
செய்கூலி கேட்பது நியாயம் தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?
பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.
கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.
இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.
திருந்த மாட்டார்கள் திருத்தப்படவேண்டும்.
விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் நம்மால் தான் முடியும்…!
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

  1. வணக்கம்
    சகோ.

    தாங்கள் சொல்வது நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி என்று சொல்லலாம்... இப்படியான விசமிகளுக்கு இவை எல்லாம் கை வந்த கலை... இவற்றை ஏன் நாட்டை காக்கும் அரசன் கேட்பதில்லை என்றால் அங்கும் ஒரு பங்கு போகிறது... அதனால் கேட்க மாட்டார்கள்...அருமையாக விரிவாக சொல்லியமைக்கு நன்றிகள் பல...த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. திருத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. அனைத்துத்துறைகளிலும் இவை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. யாருமே எதிர்பாராத விளைவினைச் சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

    ReplyDelete
  3. நகைக் கடையினைப் பொறுத்தவரை நாம்தானே
    கடைக்கு ஓடுகிறோம்
    பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்குகின்றேன்
    என்று இருப்பதை இழக்கிறோம்
    தம +1

    ReplyDelete
  4. அதி முக்கியமான பதிவு ..
    த ம +
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு...
    திருந்துவார்களா?

    ReplyDelete
  6. சாலைக் கொள்ளைக் கணக்கு அருமை பாண்டியன். நானும் இதை உணர்ந்திருக்கிறேன் (இப்ப கார் வாங்கியிருப்பதால், பேருந்துக் கட்டணத்தைவிட 4மடங்கு இவர்களுக்கு அழுவிட்டுத்தான் பெட்ரோல் கணக்குப் பார்க்க வேண்டியிருப்பதைப் பலமுறை யோசித்திருக்கிறேன்)
    அப்புறம் அந்த சேதாரக் கணக்கை நம்ம தாய்ககுலம் கவனித்தால் நல்ல பலன்இருக்கும். (அவுங்களுக்கு வாங்குற 16கிராமுக்கு அவங்களுக்குச் சேதாரம் 3கிராம்தான். நமக்கு 16கிராமுமே சேதாரம்ல?) நல்ல சிந்தனை

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு. இது பகல் கொள்ளைதான். மெயின்டனென்ஸ் என்பார்கள்...ஆனால் அதற்கு இத்தனையா செலவாகும்? ஆனா இது எல்லாவற்றிலும் இருக்கின்றது என்றுதான் தோன்றுகின்றது...இந்த பகல் கொள்ளை....கார்ட் தேய்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும்...

    ReplyDelete